நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு,  ஜூன் 26 முதல் ஜூலை 07 வரை நடைபெறவுள்ள திருவிழாவிற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பயணிகள் திரளாக கலந்துகொள்வதை முன்னிட்டு, அவர்களின் வசதிக்காக அரை மணிநேரத்திற்கு ஒருமுறை படகு சேவை தினமும் காலை 6 மணிமுதல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற மஹோற்சவ கால முன்னாயத்துப் பணிகளைத் தொடர்புடைய கலந்துரையாடலின் போது வெளியிடப்பட்டது.

இதனுடன்  பல்வேறு பகுதிகளில் இருந்து நயினாதீவை நோக்கி வரும் பக்தர்களுக்காகவும், அரை மணி நேர இடைவெளியில் சிறப்பு பேருந்துச் சேவைகள் செயல்படுத்தப்படும் என யாழ் மாவட்ட பேருந்துச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மகோத்தரவான திருவிழா நாள்கள் இவ்வாறு முறையாகப் பேணப்பட்டு, பக்தர்களுக்கான பயண வசதிகள் உறுதிப்படுத்தப்படுவது அனைவரையும் மகிழ்வுறச் செய்துள்ளது.

Share this Article