குறிகாட்டுவான் துறைமுகம் விரைவில் புதுப் பொலிவுடன்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மற்றும் நயினாதீவு செல்லும் பயணிகளுக்காக குறிகாட்டுவான்இறங்குதுறை விரைவில் புனரமைக்கப்படவுள்ளது.

450 மீற்றர் நீளமான இருவழி பாதையுடன் இரு பக்கமும் 1.5 மீற்றர் அகலமானநடை பாதை துறைமுகத்திற்குச் செல்ல அமைக்கப்படவுள்ளதுடன், சம நேரத்தில் ஏழு படகுகள் நிறுத்த கூடிய வகையில் துறைமுகமேடை அமைக்கப்படவுள்ளதுடன் , பயணிகள் தங்குமிடம் அமைப்பும் திட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசின் பாரிய வேலை திட்டம் தீவகமக்களுக்கானது என சுட்டிக்காட்டப்படுவதுடன், பெருந்தெருக்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள்தலைமையில் சம்பந்தபட்ட குறித்த வேலைத்திட்டத்திற்கான வேலைகள் உரிய திணைக்களங்களிடம் ஜூன் 08 இல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Share this Article