பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்த மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2024ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சையில் சித்தி பெற்றமாணவர்களை 2024-2025 ஆம் கல்வியாண்டுக்காக தேசியபல்கலைக்கழங்களில் உள்வாங்குவதற்காக பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழுவால் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி, 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில்பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் 2025ஆம் ஆண்டு மே மாதம்30 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாணவரும் தங்கள் விண்ணப்பத்தை ஒன்லைனில் சமர்ப்பிக்குமாறுபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் www.ugc.ac.lk என்ற உத்தியோகபூர்வஇணையத்தளத்திற்குள் பிரவேசித்து தங்களது விண்ணப்பங்களைச்சமர்ப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும்அறிவித்துள்ளது

Share this Article