தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் உயர்வு 2025 ஏப்ரல் 01 முதல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையில் அரச ஊழியர்களின்சம்பள உயர்வுக்கு இணையாக, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும்உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டதற்கு அமைய தேசிய குறைந்தபட்ச மாதாந்தசம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்துவதற்கும், அதனுடன் தொடர்புடைய ஏனைய சட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கும்தொழில் அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைய திருத்ம் செய்யப்பட்ட தேசிய குறைந்தபட்ச சம்பளம் தொடர்பில் 20.05.2025 அன்று வர்த்மானப் பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது.

2025 ஏப்ரல் 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்சமாதாந்த சம்பளம் 27,000.00  ரூபாவாக உயர்த்தப்படும்.

2025 ஏப்ரல் 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்சநாளாந்த சம்பளம் 1,080.00 ரூபாவாக உயர்த்தப்படும்.

இதேவேளை 2026 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசியகுறைந்தபட்ச மாதாந்த சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக3,000 ரூபாவால் உயர்த்தப்படும்.

2026 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்சநாளாந்த சம்பளம் 1,080 ரூபாவிலிருந்து 1,200 ரூபாவாக 120 ரூபாவால்உயர்த்தப்படும்.

 

Share this Article