அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய வசதி அறிமுகம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாட்டில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (மே 21) முதல் வங்கி அட்டைகள் மூலம் கட்டணத்தை செலுத்தும் புதிய சேவை நடைமுறைக்கு வருகிறது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வசதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதியில் அமைந்துள்ள வெளியேறும் வாயில்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தமாக 35 இடைமாறல் பகுதிகளிலும் 119 வெளியேறும் வாயில்களிலும் இன்று (மே 21) முதல் இந்த வசதி செயற்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திறமையான போக்குவரத்து சேவையை உருவாக்கவும், மக்களின் வாழ்க்கையை வேகமாகவும் எளிதாகவும் மாற்றவும், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் கீழ் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share this Article