மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் ஊழலை தடுக்கும் விசாரணைப் பிரிவுகள்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், மாகாண மட்டத்திலும் விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த அனுமதி, நேற்று (மே 15) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் மாகாண ஆளுநர்கள் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஆளுநர்கள் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து வழங்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மாகாணங்களில் உள்ள உள்கட்டமைப்பு அபிவிருத்தி, சந்திக்கும் சவால்கள் மற்றும் அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் வழிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இம்முறையில் மாகாண சபைகள் மூன்றெருகு நிதி ஒதுக்கீடு பெற்றுள்ள நிலையில், அந்த நிதியை ஒரே ஆண்டிற்குள் உபயோகிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து ஆளுநர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அத்துடன், இந்த நிதி ஒதுக்கீடுகளை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டிய தேவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் பல மாகாண ஆளுநர்கள் – ஹனீப் யூசுப் (மேல்மாகாணம்), சரத் பண்டார சமரசிங்க (மத்திய), பந்துல ஹரிச்சந்திர (தென்), திஸ்ஸ குமாரசிறி வர்ணகுலசூரிய (வடமேல்), வசந்தகுமார விமலசிறி (வட மத்திய), நாகலிங்கம் வேதநாயகன் (வட), ஜயந்த லால் ரத்னசேகர (கிழக்கு), சம்பா ஜானகி ராஜரத்ன (சப்ரகமுவா), கபில ஜயசேகர (ஊவா) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share this Article