அனலைதீவில்சிறப்பாக இடம்பெற்ற நடமாடும் மருத்துவ சேவை முகாம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அனலைதீவில் சிறப்பு பல்துறை சிகிச்சை நடமாடும் மருத்துவ சேவை முகாம்நேற்றையதினம் (மே 10) யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய குழுவினரால் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம் மருத்துவ முகாமின் போது 30க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்அனலைதீவிற்கு சென்று சேவையாற்றியதுடன் பெருமளவு மக்கள் இதனூடாக பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனலைதீவு கலாசார அமைப்பு பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய அமைப்புகளின் வேண்டுகோளுக்கமைய,  குறுகிய காலத்திற்குள்ளேயே இந்தமுகாமை ஒழுங்கமைத்து மக்களுக்கான சேவையினை வழங்கியதாக தெரியவருகின்றது.

இதன்போது  விரைந்து செயற்பட்டு மக்களுக்கான சேவையினை வழங்கிய பணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் அவரின் வைத்தியக் குழுவிற்கும், அனலைதீவு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் நுவானி மற்றும் அவரின்குழுவிற்கும், அனலைதீவு நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்களுக்கும்மக்கள் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.

Share this Article