பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கு இணையவழி விண்ணப்பிக்கும் செயற்பாடு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இதற்கான வசதிகள் www.ugc.ac.lk என்ற இணையதளத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வரும் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை பல்கலைக்கழக சேர்க்கைக்கான பதிவு செய்ய முடியும் எனவும், அதற்குப் பிறகு, தெரிவுசெய்யப்பட்ட விருப்பங்களை மாற்றுவதற்காக மட்டும் இரண்டு வார அவகாசம் வழங்கப்படும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் 43,300 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Article