வடக்கு கடலில் பெருந்தொகை கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எழுவைதீவிற்கு அப்பால் வடக்கு கடலில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்புதேடுதல் நடவடிக்கையின் போது, மூன்று சந்தேக நபர்களும், சுமார் 301 கிலோகேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி  படகும் நேற்று (மே 07) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

139 பொதிகளாக பொதிச்செய்யப்பட்டிருந்த 301 கிலோ கேரள கஞ்சாவேஇவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது .

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 120 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டசந்தேக நபர்கள் 43 முதல் 58 வயதுக்குட்பட்ட மன்னார் மற்றும் யாழ்ப்பாணம்பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

சந்தேக நபர்கள் உட்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியனமேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில்ஒப்படைக்கப்பட உள்ளன.

Share this Article