ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு விட்டது ரணிலுக்கு !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஏப்ரல் 25  இல் இலஞ்சஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறுஅறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக வெளியிடப்பட்டகருத்து குறித்து வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அங்குஅழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 25 ஆம்திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறுஅந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 17 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அன்றைய தினம்முன்னிலையாக முடியாததால் வேறு ஒரு தினத்தை வழங்குமாறு முன்னாள்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார்.

இதன்படியே அவருக்கு மேற்குறிப்பிட்ட திகதியில் முன்னிலையாகுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

Share this Article