சாட்டி விடுதியில் போதைப்பொருளுடன் கைதானவர்களுக்கு விளக்கமறியல்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வேலணை – சாட்டியிலுள்ள தனியார் விடுதியொன்றில் ஐஸ்போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் தங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் 20 மற்றும் 30 மில்லிகிராம் ஐஸ்போதைப்பொருளுடன் இரு இளைஞர்களை கைது செய்தனர்.

கைதான இருவரும் விசாரணைகளின் பின்னர் நேற்று புதன்கிழமை (ஏப்ரல்16) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை, அவ்விரு இளைஞர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

Share this Article