பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ்நிலையங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு சகலபொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியஅறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்குபரிசுகள் வழங்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வழங்கப்படும் பணத்தையோ அல்லது பரிசுகளையோ சிரேஷ்டஅதிகாரிகள் ஏற்கக்கூடாது.

இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத பட்சத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள்எடுக்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்

Share this Article