பிள்ளையானை 90 நாட்கள் தடுப்புக்காவல் விசாரணைக்கு அனுமதி !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளைமேற்கொள்வதற்காக சிவனேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள்தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம்ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ‘பிள்ளையான்‘ கடந்த 8 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

 

சிவனேசதுரை சந்திரகாந்தனை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்திருந்தனர்.

2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகமுன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில்இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்த நிலையில், அவர்கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார்.

Share this Article