அனலைதீவுக்கான நோயாளர்காவு படகுச்சேவை அவசியம் – ஆளுநரிடம் கோரிக்கை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அனலைதீவுக்கான நோயாளர்காவு வண்டி மற்றும் நோயாளர் படகுச்சேவைஅவசியமாக செய்து தருமாறு அனலைதீவு பிரதேச மருத்துவமனை நோயாளர்நலன்புரிச் சங்கத்தின் சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கடந்த மார்ச் 30 அன்று அனலைதீவில் இடம்பெற்ற மறுசீரமைக்கப்பட்டமருத்துவர் விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்ட வடமாகாண ஆளுநரிடமே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது  அனலைதீவுப் பிரதேசத்தினுள் செயற்படும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து அடிக்கடி பழுதடைகின்றமையால் புதிய பேருந்து பெற்றுத்தருமாறும், அனலைதீவு இறங்குதுறை புனரமைப்பு செய்தல் மற்றும் அனலைதீவினுள் காணப்படும் வீதிகளின் புனரமைப்பு ஆகியகோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article