வேலணை பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வேலணை பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதேசஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டுமண்டபத்தில் இன்றைய தினம் (மார்ச்24) இடம் பெற்றது.

பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமஅலுவலர் பிரிவிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவற்றில் மிக அவசியமாக நடைமுறைப்படுத்த வேண்டியதிட்டங்கள் குறித்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அவர்கள் கிராம மட்டஅமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். அத்துடன் பொது மக்களின் விசேட கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள்குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் க.சிவகரன், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர்,  பாராளுமன்ற உறுப்பினர்இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன்சிறிபவானந்தராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகளும் மற்றும்திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகளும் மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அலுவலர்களும் கிராம மட்டத்தில்இயங்கும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Share this Article