சாட்டியில் இயற்கையின் ஆசியுடன் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாள் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நேற்றையதினம் (நவம்பர் 27) தீவகம் சாட்டியில் இடம்பெற்ற நிகழ்வில் பெற்றோர்கள் சாட்டி மாதா ஆலய வளாகத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

பொதுச்சுடரினை ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த மாவீரரின் தந்தை பிரான்சிஸ் சேவியர் ஏற்றிவைக்க , சம நேரத்தில் கடற்பகுதியிலும் இரு மாவீரர்களின் சகோதரன் அர்ச்சுனா சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து பெற்றோர் , உறவினர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட நினைவுச் சுடர்களை ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி   செலுத்தினர்.

நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் தீவகத்தில் குறித்த நேரத்திற்கு அமைதியாகியமையால் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.

அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் மாதம்21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article