ஊர்காவற்றுறையில் கூரிய ஆயுதங்கள் மீட்பு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊர்காவற்றுறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரியஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

வாள்கள் உள்ளிட்ட ,கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள்எவரும் கைதுசெய்யப்பட்டவில்லை.

ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று(ஒக். 24) வியாழக்கிழமை காலை நடத்தப்பட்ட சோதனையின்போதுவீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக குறித்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார்சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை அவ் வீட்டில் வசித்த சந்தேக நபர் தலைமறைவான நிலையில்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஊர்காவற்றுறை பொலிஸார் குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article