இலங்கையின் புதிய பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபாபிதுஷினீ பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று முற்பகல் அவர்பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

2011ஆம் ஆண்டு பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கவுக்குப்பிறகு இலங்கையின் வரலாற்றில் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும்இரண்டாவது பெண் நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஆவார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக இணைந்து கொண்டபெர்னாண்டோ, 30 வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், இவர் சிரேஷ்ட அரச சட்டத்தரணி, பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர்ஜெனரல் ஆகிய பதவி உயர்வுகளையும் பெற்றுள்ளார்.

Share this Article