ஜனாதிபதியின் புகைப்படங்கள், வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் எழுத்துமூல அனுமதியை பெற வேண்டும் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவுசஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளைவெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியைஅனைத்து அரச நிறுவனங்களுக்கும் பெறுமாறு ஜனாதிபதியின் செயலாளர்கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

அரச நிதியைப் பெற்று மேற்கொள்ளப்படும் பணிகளை ஏற்பாடு செய்யும் போதுஅரசாங்கத்தின் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாகசெயற்படுவது அவசியமானது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் அரசநிறுவனங்களுக்கு மேலும் அறிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அனைத்து மாகாண பிரதமசெயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபன சபைகள்உள்ளிட்ட சட்டபூர்வ நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசிற்கு சொந்தமானநிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம்இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.

Share this Article