நெடுந்தீவு கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடல் பகுதியில் இன்று (அக் 09) இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதான 21 இந்திய மீனவர்கள், மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பின்னர் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் இன்று (அக் 10) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Share this Article