அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த முக்கியத் தகவல் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று (ஒக். 01) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் விஜித ஹேரத்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான சம்பள உயர்வு சாத்தியமா இல்லையா என்பது குறித்துதீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சம்பள அதிகரிப்பு எந்த மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்பதும் பலகட்டங்களில் செய்யப்படுமா என்பதும் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் போதுகலந்துரையாடி தீர்மானிக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் விஜித ஹேரத்சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே தமதுஅரசாங்கத்தின் கொள்கை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது

Share this Article