இன்று முதல் கீரிமலையிலிருந்து கொழும்புவரை பேருந்து சேவை இயக்கப்படுகின்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கை போக்குவரத்து சபை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பு நோக்கி இன்று (01 ஒக்டோபர்) முதல் மீண்டும் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்ட இந்த சேவை, பேருந்து மற்றும் சாரதி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று மாலை 7:15 மணிக்கு கீரிமலையிலிருந்து புறப்படும் பேருந்து, காங்கேசன்துறை, தொண்டமனாறு, வல்வெட்டித்துறை வழியாக பருத்தித்துறையைச் சென்றடைந்து, அதன் பின்னர் மந்திகை, நெல்லியடி, துன்னாலை வழியாக வவுனியா, அனுராதபுரம், புத்தளம், சிலாபம் வழியாக கொழும்பு சென்றடையும் என பருத்தித்துறை சாலை முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Share this Article