நேற்று நள்ளிரவு முதல் முன்னைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறை- அரசாங்கம் அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முன்னைய விசா வழங்கும் நடைமுறை நேற்று நள்ளிரவு 12 மணிமுதல் செயற்படும்என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முன்னைய விசாவழங்கும் நடைமுறை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

விசா வழங்கும் நடைமுறை தொடர்பான சமீபத்தைய விவகாரங்களிற்கு தீர்வைகாண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள பொதுமக்கள்பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் விசா வழங்கும் நடைமுறையில் காணப்பட்டசவால்களிற்கு தீர்வை காண்பதற்கு கடந்த 24 மணிநேரத்தில் துரிதமானநடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவுமுதல் வெளிநாட்டவர்கள் அனைவரும் முன்னையநடைமுறையின் கீழ் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என அவர்தெரிவித்துள்ளார்.

விஎவ்ஸ் குளோபலின் விசா நடைமுறை பலருக்கு குறிப்பிடத்தக்கபிரச்சினைகளை ஏற்படுத்தியது குறிப்பாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவெளிநாட்டவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர் என அமைச்சர்தெரிவித்துள்ளார்.

Share this Article