சுமூகமான தேர்தலுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் அரச அதிபர் நன்றி தெரிவிப்பு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாண மாவட்டத்தில் சனாதிபதித் தேர்தலானது செப்.21 அன்று நீதியாகவும், சுமூகமாகவும், நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன்அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர், உத்தியோகத்தர்கள், வாக்களிப்பு, வாக்கெண்ணல், மேற்பார்வை,குழுக்கடமைகளில் ஈடுபட்ட அனைத்துத் தரஉத்தியோகத்தர்கள், பாதுகாப்புகடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப் படையினர், தீவக கடற்போக்குவரத்தில் ஈடுபட்ட கடற்படையினர், நெடுந்தீவிலிருந்துவாக்குப் பெட்டிகளை உலங்குவானூர்தி மூலம் கொண்டுவருவதற்கு உதவியவிமானப்படையினர், பிரதேச இணைப்பு அலுவலக கடமைகளில் ஈடுபட்டபிரதேச செயலாளர்கள், உத்தியோகத்தர்கள், போக்குவரத்து சேவையினைவழங்கிய இலங்கை போக்குவரத்துச் சபை, தனியார் போக்குவரத்துச் சங்கம், உடனுக்குடன்தேர்தல் முடிவுகளை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சகலதரப்பினர்களுக்கும் அரசாங்க அதிபர் என்கின்ற ரீதியிலும், தெரிவத்தாட்சிஅலுவலர் என்கின்ற ரீதியிலும் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமது உளமார்ந்தநன்றியினைத் தெரிவித்துள்ளமை குறப்பிடத்தக்கதாகும்.

Share this Article