ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணிவரை நடைபெறும்.

இதற்கமைவாக, அனைத்து வாக்காளர்களும் உரிய ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்கு சென்று, தங்கள் வாக்குகளை சரியான நேரத்தில் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 1 கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 352 வாக்காளர்கள் தகுதிபெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

மேலும் மாலை வாக்களிப்புகள் நிறைவடைந்தவுடன் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட இருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி காலமானார்.

திடீர் உடல்நலக்குறைவால் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மொஹமட் இல்யாஸ், 78 ஆவது வயதில் உயிரிழந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சி காலத்தில், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மொஹமட் இல்யாஸ் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

4o
Share this Article