புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் இருந்து மூன்று கேள்விகளை நீக்குவதற்கு நடவடிக்கை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின்முதல் வினாத்தாளில் இருந்து சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளை முறையானவிசாரணைகளுக்கு பின்னர் நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாள் போன்று மாதிரி வினாத்தாள்ஒன்று அலவ்வ பிரதேசத்தில் வட்ஸ்அப் குழுக்களில் பரவி வருவதாக எழுந்தமுறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைக்கு பின் இந்த தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளதாக, நாம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர்தெரிவித்தார்.

இதன்படி, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாளை (18) விசாரணை அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட பகுதிக்குசெல்லவுள்ளதாகவும், அவர்களின் அறிக்கையின் பின்னர் சம்பந்தப்பட்டவினாக்களை நீக்குவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும்பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

Share this Article