கோப்பாயில் வாகனங்களுக்கு தீ வைத்து தப்பிச்சென்ற கும்பல் – பெண் காயம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 

கோப்பாயில் வன்முறையாளர்களால் வேன் மற்றும் கார் நேற்றைய தினம்சனிக்கிழமை (செப். 7) இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது தீயை அணைக்க முயற்சித்த பெண்ணொருவர்தீக்காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும்கார் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் தாக்குதல் நடத்தி, வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அதை பார்த்த வீட்டார் தீயினை அணைக்க முயன்றபோது, வாகனங்களின்உரிமையாளரினது தாய் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர்.

Share this Article