நயினாதீவு படகுச் சேவைகளை ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தீவகங்களுக்கிடையிலான படகுச் சேவைகளை ஒழுங்குபடுத்தல் தொடர்பானகலந்துரையாடல் இன்று (ஆகஸ்ட்26) வேலணை பிரதேச செயலக சிறியமாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் க.சிவகரன் தலைமையில்நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் சீரான கடற்போக்குவரத்தினை மேற்கொள்வதுதொடர்பாகவும், படகு உரிமையாளர்கள் தனியாக சங்கம் ஒன்றை உருவாக்கிபதிவு செய்தல் தொடர்பாகவும் மற்றும் கடற்போக்குவரத்தில் படகுஉரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும்கலந்துரையாடப்பட்டது.

இதன்போது நிறைவேற்று பொறியியலாளர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நயினாதீவு உப அலுவலக பொறுப்பதிகாரி ( பிரதேச சபை), நிர்வாகஉத்தியோகத்தர் மற்றும் படகு உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

Share this Article