தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் பயிற்சி நிறைவு – சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் பயிற்சி நெறியினை நிறைவு செய்தமாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில்அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்இன்றையதினம் (ஆகஸ்ட்07) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில்நடைபெற்றது.

கல்வி அமைச்சினால் தொழில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் க. பொ. தஉயர்தரப் பரீட்சையில் தோற்றி பெறுபேற்றினை எதிர்பார்க்கின்றமாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மூலம் தொழில் கல்வியை மேம்படுத்தும்பயிற்சி நெறியானது 2024.03.05 ஆம் திகதி தொடக்கம் 2024.05.05 ஆம்திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேச செயலக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட 15 பாடசாலைகளில் நடாத்தப்பட்டது. இதன் ஒரு அங்கமாகயாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியில்நடாத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றிய 44 மாணவர்களுக்கு இச் சான்றிதழ் வழங்கப்பட்டது.           

  இந் நிகழ்வில்   உதவி மாவட்டச் செயலாளர், முறைசாராப்பிரிவு உதவிக் கல்விப்பணிப்பாளர், ஆசிரியர் ஆலோசகர், வளவாளர்கள், மாவட்டச் செயலகஉத்தியோகத்தர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article