உணவுத் திருவிழா – தொழில் முயற்சியாளர்களுடன் கலந்துரையாடல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஆவணி மாதம் 05 ஆம்திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளிப் பகுதியில்    நடைபெறவுள்ள  உணவுத்    திருவிழா மற்றும் கண்காட்சி, விற்பனை தொடர்பானமுன்னாயத்தக் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக  தொழில்முயற்சியாளர்களுடனான  கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்டபதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (29) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் தொழில்முயற்சியாளர்களுக்கான சுகாதாரம், போக்குவரத்து மற்றும் இதரவசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாகஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலில்  உதவி மாவட்ட செயலாளர், யாழ் மாநகர சபை பொதுச்சுகாதார பரிசோதகர், தொழில் முயற்சியாளர்கள், மாவட்டச் செயலகஉத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this Article