பொலிஸ் மா அதிபருக்கு இன்று பணி இடைக்கால தடையுத்தரவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுத்துஉயர்நீதிமன்றத்தினால் இன்று இடைக்கால தடையுத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராககொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 08 தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவுப்பெற்றதைதொடர்ந்து இன்று(ஜூலை24) இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

யசந்த கோதாகொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியநீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைசெய்யப்பட்டன.

அரசியலமைப்பு பேரவையின் முறையான அனுமதியின்றி தேஸ்பந்துதென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பைமீறும் செயலாகும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பொலிஸ் மா அதிபராக நியமனம் செய்வதற்கு ஜனாதிபதியினால்பரிந்துரைக்கப்பட்ட தேஷ்பந்து தென்னகோனின் நியமனம் அரசியலமைப்புபேரவையினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை எனமனுதாரர்கள் தமது மனுக்களில் கூறியுள்ளனர்.

Share this Article