நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசியடெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயினால் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 30,663 டெங்குநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அதிகளவான டெங்குநோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர் எனவும் அவர்களின்மொத்த எண்ணிக்கை 7,119 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்குநோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் இதனால் பொதுமக்கள்அனைவரும் தங்களது சுற்றுப்புறச் சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறும்தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது

Share this Article