ஜனாதிபதியை Dr.அர்ச்சுனா இன்று சந்திப்பு!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.

குறித்த சந்திப்பானது இன்றைய தினம்(ஜூலை14) இடம்பெறவுள்ளது.

வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா வடக்கு சுகாதாரத் துறையில் காணப்பட்டபல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி இருந்த நிலையில், அது குறித்துகலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அழைப்புவிடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

அத்துடன், நேற்றையதினம்(13) அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்ஒருவரை வைத்தியர் அர்ச்சுனா சந்தித்து பிரச்சினைகள் குறித்துகலந்துரையாடியதாகவும் அறிய முடிகிறது.

மேலும்,  எதிர்வரும் திங்கட்கிழமை சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகள்யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் மக்கள் தமது பிரச்சினைகளைஅவர்களிடத்தில் நேரடியாக எழுத்து மூலமாக தெரிவிக்க முடியும் எனவும்தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை விட்டு கொழும்பு நோக்கி விஜயம்மேற்கொண்ட போது வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா ஜனாதிபதியை சந்திக்கஇருப்பதாக ஊடறுப்பு நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தி இருந்தமைகுறிப்பிடத்தக்கது

Share this Article