சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராகவைத்தியர கோபாலமூர்த்தி ரஜீவ் இன்றையதினம்(ஜூலை09) கடமைகளைபொறுப்பேற்றுக் கொண்டார்.

 

Screenshot

சுகாதார அமைச்சின் கடிதத்திற்கு அமைய, வைத்தியசாலையில் இன்றுஇடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன்பத்திரன, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்ஆ.கேதீஸ்வரன் முன்னிலையில் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர்கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்தராமநாதன் அர்ச்சுனாவை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பதில் வைத்திய அத்தியட்சகருக்கு ஆதரவாக தென்மராட்சி பொதுஅமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் நேற்று பாரிய போராட்டம்நடாத்தப்பட்ட நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாசுகவீன விடுமுறை என தெரிவித்து கொழும்புக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது

Share this Article