உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி யாழ் மாவட்டம் வருகை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான  பணிப்பாளர் வதிவிட பிரதிநிதிஅப்துள் ரகீம் சித்திக்  அவர்கள்  உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணமாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணமாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களைநேற்றையதினம் (ஜூலை04)   அலுவலகத்தில்  சந்தித்துகலந்துரையாடியுள்ளார்.

உலக உணவுத் திட்டத்தின் செயற்றிட்டத்தின் விடயங்கள் தொடர்பானகலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில்  யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  7 பிரதேச செயலாளர்  பிரிவுகளான நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய் ஆகியவற்றில் உணவுக்கான வேலை திட்டமூடாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை செயற்படுத்தல்குறிப்பாக குளங்கள் கால்வாய்களை புனரமைத்தல் தொடர்பாகவும்செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில்மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும்கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article