நயினாதீவு படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவரின் உடலம் உறவினர்களிடம் கையளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவுக்கு கட்டிட பொருட்கள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த புங்குடுதீவைச் சேர்ந்த சுந்தரலிங்கம் அருண் (கோபி) என்பவரின் உடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் முடித்து உறவினர்களிடம் நேற்றையதினம் (ஜூலை 03) மாலை கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (ஜூலை 02) இரவு 8.00 மணியளவில் குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு சீரற்ற முறையில் கல், மண் மூடைகளை அடுக்கி ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததினால் ஒருவர் உயிரிழந்ததுடன் 03 பேர் காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article