பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது ஆர்மீனியா!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பாலஸ்தீனத்தின் காசா, ரஃபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் கடந்த 9 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 37 ஆயிரத்துக்கும்அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதேபாலஸ்தீனம்–இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவைமுன்மொழிந்துள்ளது.

இந்த நிலையில், ஆர்மீனியா நாடும் பாலஸ்தீனத்தை தனி நாடாகஅங்கீகரித்துள்ளது.

இதுதொடர்பாக, ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சு கூறுகையில்இஸ்ரேல்–பாலஸ்தீனம் இடையிலான மோதலை தீர்க்க பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும் என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அயர்லாந்து, ஸ்பெயின், நோர்வே ஆகியவை பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ளன.

முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே பாலஸ்தீனம் ஒரு நாடாகசெயல்படுவதற்கானதகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

Share this Article