ஜப்பானில் பாக்டீரியா தொற்று: அச்சம் வேண்டாம் ,சுகாதார அமைச்சு விளக்கம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஜப்பானில் பரவி வரும் அரிய பாக்டீரியா தொற்று தொடர்பில் இலங்கையர்கள்தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சின்தொற்றுநோய் பிரிவின் தலைவர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

அரிய பாக்டீரியா தொற்று பரவல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“இது பொதுமக்களிடையே உள்ள பாக்டீரியா பரவல் நிலை. அரிதாக, இது ஒருசிக்கலாக அபாயகரமான நிலையை ஏற்படுத்தலாம். ஜப்பான் சமீபத்தில்பாக்டீரியா பரவல் அதிகரிப்பதைக் கவனித்ததாகத் தெரிவித்துள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மூலம் இதை மாற்றவும் முடியும். ஆனால் அரிதாக, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எதிர்க்கும் பாக்டீரியாக்களும் உள்ளன. இருப்பினும் நம் நாட்டில் பாக்டீரியா பரவிவிடுமோ அல்லது பாதிப்பைஏற்படுத்துமோ என்ற தேவையற்ற அச்சத்தை யாரும் கொள்ள தேவையில்லை” எனவும் டொக்டர் சமித்த கினிகே மேலும் தெரிவித்துள்ளார்.

Share this Article