தடைக்காலம் நிறைவு: மீண்மீடும் மீன்பிடிக்கு தயாராகும் தமிழக மீனவர்கள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடைக்காலம் இன்று (14) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. 

1983 இன் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தல்  சட்டத்தின் கீழ் இந்த தடைவிதிக்கப்படுகிறது. தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரைமீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும் மீன்வளத்தைபாதுகாக்கும் நோக்கிலும் மீன்பிடிக்கு தடை விதிக்கப்படுவது  வழமை.

வருடாந்தம் எப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையான 61 நாட்களுக்குவிசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன்பிடிக்கதடை விதிக்கப்படுகின்றது. 

இன்று நள்ளிரவுடன் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு தமிழகமீனவர்கள் மீன்பிடிக்கு தயாராகி வருகின்றனர். 

இந்திய எல்லை தாண்டி மீன்பிடிக்கக்கூடாது, தடை செய்யப்பட்ட வலைகளைபயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ள தமிழக மீன்வளத்துறை, உயிர் காப்புஉபகரணங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களை எடுத்துச்செல்ல வேண்டும்எனவும் வலியுறுத்தியுள்ளது

Share this Article