யாழில் இளைஞர்களை குறி வைத்து நடத்தும் மோசடிகள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவோரால், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி கிராமப் புற இளைஞர்கள்ஏமாற்றப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத்நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஏமாற்றப்படும் இளைஞர்களிடம் இருந்து 30 தொடக்கம் 40 இலட்சம்ரூபாய் வரையில் பணமோசடி இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் ஏமாற்று நாடகத்தை அறியாத அப்பாவி இளைஞர்கள் போலிவாக்குறுதிகளை நம்பி பணத்தை இழக்கின்றனர்.

இது தொடர்பான ஏராளமான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரிபொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாகவும் விழிப்பாகவும்இருப்பது அவசியம் என ஜெகத் நிஷாந்த மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், அண்மைக்காலமாக இவ்வாறான மோசடிகள் அதிகரித்துவருவதாகவும்  வெளிநாடுகளில் இருந்து வருவோரே இத்தகைய மோசடியில்அதிகம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article