ஊர்காவற்துறையில் கடற்றொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 05) காலை ஊர்காவற்துறை கண்ணகி அம்மன் ஆலய துறைமுக முன்றலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் “பாரம்பரிய மீனவர்களின் கடற்றொழிலை பாதிக்கும் அட்டைப் பண்ணையை உடன் நிறுத்து, மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே, மீனவர்களை வாழவிடு” ஆகிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினரின் ஒருங்கிணைப்பில், பொது அமைப்புகள், ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Share this Article