பாடசாலை விடுமுறை, பரீட்சை, புதிய ஆசிரியர் பதவியேற்பு தொடர்பில் – வடமாகாண கல்வி பணிப்பாளர் அறிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாளையதினம்(ஜூன்03) திங்கட்கிழமை வடக்கு மாகாண பாடசாலைகளும்நடைபெற மாட்டாது என வடமாகாண கல்வி பணிப்பாளர் தி. ஜோண் குயின்ரஸ்தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாகநாளை(03/06/2024) நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும்விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதனையடுத்தே அவர் இவ்வறித்தலை விடுத்துள்ளார்.

நாளைய தினம் புதிதாக கடமையைப் பொறுப்பேற்க உள்ளஆசிரியர்கள் நாளை மறுதினம் தமது கடமைகளை பொறுப்பேற்குமாறும்அறிவித்துள்ளார்.

மேலும் நாளை நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளும்பிற்போடப்பட்டுள்ளதுடன், குறித்த பரீட்சை தொடர்பான திகதி பின்னர்அறிவிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Share this Article