சட்டவிரோத மதுபானம் அருந்தி நான்கு பேர் பலி!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தம்புள்ளை பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி நான்கு பேர்உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார்விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தம்புள்ளை விகாரை சந்தி பகுதியில் பதிவாகியுள்ளது. இரண்டுநாட்களுக்கு முன்னர் இதே சட்டவிரோத மதுபானத்தை அருந்தி இருவர்உயிரிழந்துள்ளதாகவும் நேற்று(மே29) அதே மதுபானத்தை அருந்தி இருவர்உயிரிழந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில் பல தடவைகள்பொலிஸாரினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில்முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளமை விசேடஅம்சமாகும்.

நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த சட்டவிரோத மதுபான விற்பனைமோசடியால் பிரதேசவாசிகள் தற்போது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைக்கு மேலதிகமாக, இரசாயனபகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று அவர்களின் மரணத்திற்கான உண்மைகாரணங்களைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article