புங்குடுதீவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு  கடந்த மே26 அன்று வேலணை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட புங்குடுதீவு சவேரியார் ஆலயத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வளவாளராக ஊர்காவற்றுறை பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் சு.சதீஸ்காந் கலந்து கொண்டு  இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனையான போதைப்பொருள் பாவனை மற்றும் புகைத்தல் தொடர்பாக கலந்துரையாடினார்.

இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ் மாவட்ட உத்தியோகத்தர், சவேரியார் ஆலய பங்குதந்தை, கிராம சேவையாளர், மற்றும் வேலணை பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட 90 இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article