ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும்பரிநிர்வாணத்தை நினைவுகூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளாகும்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பௌத்தர்கள் விளக்குகளை ஒளிரவிட்டு, வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, மிகுந்த பக்தியுடன் இதனைக்கொண்டாடுகின்றனர்.

“சிறந்த நாளைக்காக இன்றே தியாகம் செய்வோம்” என்ற கௌதம புத்தரின்போதனையின் அடிப்படையில் ஞானம் பெறுவதற்காக புத்தர் கொண்டிருந்தபெரும் உறுதிப்பாட்டை, ஒரு நாடாக இந்த இக்கட்டான தருணத்தில் நாம்அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

“சப்பத்த சம்மானசோ” அனைவரையும் சமமாக நடத்தும் பௌத்த உபதேசத்தைஇன்று நாம் நினைவுகூர வேண்டும். அதேபோல் ஒரு நாடாக அதைநடைமுறையில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இனம், மதம், சாதி, கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்துகட்டியெழுப்பப்படும் இந்நாட்டை தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்லவேண்டும். அதற்கு புத்தரின் போதைனைகள் வழிகாட்டும்.

விரைவான பௌதிக வளர்ச்சியை நோக்கி நகரும் உலகில் மனவளர்ச்சியுடன்கூடிய ஆன்மீக மற்றும் கண்ணியமான ‘மனிதனை’ உருவாக்குவதே இந்த வெசாக்பண்டிகையின் முக்கிய நோக்கம் என்பதை நினைவில் வைத்து, அனைவருக்கும்சிறந்த வெசாக் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

ரணில் விக்ரமசிங்க,

ஜனாதிபதி,

இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசு.

Share this Article