கட்டுநாயக்காவில் மூன்று கோடி பெறுமதியான தொலைபேசிகளுடன் இருவர்கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
டுபாய் நாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குகொண்டுவரப்பட்ட மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கையடக்கதொலைபேசிகளுடன்

இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு 13 பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடையவரும், 28 வயதான இருவரும்துபாய் நாட்டில்  இருந்து இலங்கைக்கு தொலைபேசி கொண்டுவந்த  நிலையில்கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் சுங்க திணைக்களத்திற்கு பொருட்களை கொண்டுவருவதற்கான அனுமதி கட்டணம் செலுத்தாது சட்டவிரோதமான முறையில்அவற்றை கொண்டு வந்த நிலையில் விமான நிலைய குற்றப்புலனாய்வுதிணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் போதுமூன்று கோடி பெறுமதியான 1084 கையடக்க தொலைபேசிகளைகைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றிய பொருட்கள் விமான நிலைய சுங்கத் திணைக்களத்திடம்ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Share this Article