இலங்கையில் மிகவும் உயரமான (7’2″) மனிதனாக அடையாளம் காணப்பட்டமுல்லைத்தீவு நபர்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக அடையாளம் காணப்பட்ட  குணசிங்கம் கஜேந்திரன் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வசித்துவருகின்றார்.

இவர்  7 அடி 2 அங்குலம் உயரத்தினை  கொண்டிருப்பதனாலேயே இலங்கையில்தற்போது உயரமான மனிதனாக இடம் பிடித்துள்ளார். இரண்டு பிள்ளைகளுக்குதந்தையான 45 வயதுடைய இவர் முச்சக்கர வண்டி ஓட்டுநராக இருக்கின்றார்.

இவர் அதிக உயரமாக இருப்பதனால் முச்சக்கரவண்டிக்குள் அமர்ந்திருப்பதுகூட கடினமானதென்பதுடன்

தனது அசாதாரண உயரத்தால் எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்கநேரிடுவதாகவும், இலங்கையில் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற பாதணிகளைஎடுக்க முடியவில்லை எனவும், அவற்றை வெளிநாடுகளில் இருந்துபெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதுடன் பேருந்தில் இருக்கைகள் கிடைக்காதுவிட்டால் பயணிப்பது சிரமமானது எனவும்நீண்ட தூரம் பேருந்தில் பயணிப்பதாக இருந்தால் இருக்கைக்கு முன்பதிவுசெய்ய வேண்டிய கட்டாயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.   

Share this Article