காதலியையும் அவளது தாயையும் வெட்டிய பின் இளைஞன் தற்கொலை!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காதலியையும் காதலியின்தாயாரையும் வெட்டிய பின்னர் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதிவாகியுள்ளதாக இளவாலை பொலிசார் தெரிவித்தனர்.

பனிப்புலம் பகுதியினை சேர்ந்த 35 வயதான இளைஞன் அதே பகுதியினைசேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்த நிலையில் வீட்டாரிடையே முரண்பாடுஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல்16) அதிகாலை வீட்டு வளவினுள் புகுந்துஒழித்திருந்த இளைஞன் அதிகாலை வீட்டில் உறங்கிய நிலையில் இருந்தகாதலியையும் காதலியின் தாயாரையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்று பனிப்புலம்பகுதியில் உள்ள வளவொன்றினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்திலையில் காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்

ஆரம்பகட்ட விசாரணைகளை இளவாலை பொலிசார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Share this Article