யாழ்.போதனா மருத்துவமனை இரத்த வங்கியில் குறைந்த குருதி கையிருப்பில்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்த வங்கியில் எல்லா வகைக்குருதிக்கும்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 330 பைந்த் குருதி இருக்க வேண்டியஇடத்தில்  தற்போது 160 பைந்த் குருதியே இருக்கின்றது. இது மிகவும் குறைந்தகையிருப்பாகும். தொடர்ந்து நாம் இரத்ததான முகாம்களை நடாத்தி குருதியைசேகரித்தாலும் நாளுக்கு நாள் குருதியின் தேவை அதிகரித்துக் கொண்டேசெல்கின்றது. இந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதி வழங்குபவர்களின் எண்ணிக்கைஅதிகரிக்கவில்லை. இதனால், குருதி தேவைப்படும் நோயாளர்களுக்குக்குருதியை விநியோகிக்கும் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரத்தவங்கியும் இக் கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனாமருத்துவமனையின் இரத்தவங்கிப் பிரிவினர் தெரிவித்தனர்.  

இதுதொடர்பில் நேற்று வியாழக்கிழமை (11.04.2024) யாழ்ப்பாணம் போதனாமருத்துவமனை இரத்தவங்கிப் பிரிவினர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,      

இரத்ததானம் செய்கின்ற அமைப்புக்களிடம் எமது கோரிக்கையை விடுத்தபோதும் நீண்ட விடுமுறை காரணமாக எல்லோரும் விடுமுறையில்சென்றுவிட்டார்கள். அத்துடன் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறைவிடப்பட்டுள்ளது. இதனால், எமது வழமையான இரத்ததான முகாம்களுக்குமேலதிகமாக அவசரமாக குருதிக் கொடை முகாம்களை ஏற்பாடு செய்யமுடியவில்லை. எனவே, இந்த இக் கட்டான நிலையைக் கருத்தில் கொண்டுபொதுமக்கள் இரத்ததானம் செய்ய முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பின்பக்கத்தில் விக்டோரியாவீதியில் அமைந்துள்ள 12 ஆம் இலக்க நுழைவாயிலூடாக இரத்தவங்கிக்குநேரடியாகச் சமூகமளித்து குருதிக் கொடை வழங்க முடியும். அல்லது இக்காலத்தில் குருதிக்கொடை முகாம்களை உங்கள் பிரதேசங்களில் ஒழுங்குசெய்து தட்டுப்பாட்டை நீக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். மேலதிக தகவல்களுக்கு 0772105375, 0212223063 ஆகிய தொலைபேசிஇலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றுள்ளது.

Share this Article