யாழ்ப்பாணம், அராலியில் மாபெரும் சைக்கிள் ஒட்டப்போட்டி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம், அராலி சிறீமுருகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில், மாபெரும் சைக்கிள் ஒட்டப்போட்டி இன்றையதினம் நடைபெற்றது.
சிறீமுருகன் சனசமூக நிலையத்தின் 84வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட இந்தப் போட்டியானது சிறீமுருகன் சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பமானது.

குறித்த சைக்கிள் ஒட்டப்போட்டி ஐந்து சுற்றுக்களாக ஆலடிச் சந்தி, அராலி ஆவரம்பிட்டி முத்துமாரியம்மன் ஆலய வீதி, அராலிப் பாலம், வட்டுக்கோட்டை சந்தி ஊடாக மீண்டும் சிறீமுருகன் சனசமூக நிலையத்தை வந்தடைந்தது.

இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்த வீரர்களும் பங்குபற்றியிருந்தனர்.

சிறீமுருகன் சனசமூக நிலையத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தனர்.

 

 

 

Share this Article